அழிவின் அழைப்பிதழ் நாவல் பாகம் 1

நாவல் – அழிவின் அழைப்பிதழ்

இ.தியாகலிங்கம் நோர்வே

எய்ட்ஸைப் பற்றிய பிரக்ஞையைத் தமிழுலகிற்கு முதலில் ஊட்டிய நாவல். இந்த நாவலும் ஐரோப்பிய அனுபவங்களைக் கொண்டது. ஐரோப்பிய அனுபவங்களைத் தமிழச் சிந்தனை மரபில் இருந்து விடுபட முடியாத இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் போது ஏற்படும் சிக்கல்களைச் சித்தரிக்கும் நாவல்.

Utforsk denne podcasten

கொல்லும் கனவு, சிறுகதை, இ. தியாகலிங்கம் நோர்வே

விசு மருத்துவரிடம் சென்று வந்திருந்தான். அவர் இதயத்தைப் பற்றிக் கதைத்தார். அது அலுத்துப் போயிருக்க வேண்டும். இளம் குருவி இறக்கை அடிப்பது போல் துடிக்க வேண்டியது, இறந்து போகும் பறவை போல இப்போது அடிக்கிறதாம். அதுவே அவன் அம்மாவைக் கைவிட்டது. இறுதி நேரம் தன்னால் முடியாது என்று மௌனமாக நிறுத்திக் கொண்டது. அந்த நினைவு இன்றும் பதிந்த ஆணியாக அவன் மனதில். அப்படியே தன் முடிவுமா என்கிற கலக்கம் வேறு. மருத்துவர் சிலகாலம் பார்த்துவிட்டு pacemaker வைப்பதைப் பற்றி யோசிக்கலாம் என்றார். அதுகூடப் பருவாய் இல்லை. அதைவிடக் கொல்லும் வருத்தம் ஒன்று அவனோடு நீண்ட காலம் வாழ்ந்து வருகிறது. அதைப் பற்றி இன்றும் மருத்துவரிடம் கதைக்க அவனுக்கு மனம் வரவில்லை. அதைப் பற்றிக் கதைத்தால் பலர் கொடுப்பிற்குள் சிரிப்பார்கள். அவன் மனதிற்குள் சிறை வைத்ததை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பவில்லை. இந்த வயதில் அதைப்பற்றிக் கதைப்பது சாதாரண மனிதனுக்கு அவமானம் என்று நினைத்தான்.

சக்தியை உறிஞ்சிச் சக்கையை எறிந்ததாக உடல் வலுவை இழந்த பஞ்சியும் அலுப்பும். நித்திரை பிசாசு போலப்  படுக்கைக்கு இழுத்துச் சென்றது. போராட முடியாத போது பேயிடம் சரணடைந்தால் என்ன? பிசாசிடம் சரணடைந்தால் என்ன? கேள்விகள் அற்றுக் கட்டிலில் போய் விழுந்தவனை அடுத்த கணமே நித்திரை தனக்குள் மூர்க்கமாக இழுத்துக் கொள்ள முயன்றது. ஆனால் ஏதோ ஒரு உணர்வு ‘நீ இன்று நித்திரை கொள்ளாதே’ என்று எச்சரித்தது. அதனால் அவன் நித்திரை இழுபாட்டில் அகப்பட்டது.

நித்திரை என்றால் நிம்மதி என்கின்ற ஒரு காலம் இருந்ததான நினைவு அவனிடம் உண்டு. அது எப்படி நலிவுற்றது? கனவுகள் துரத்தி, பதறி விழித்து, பின்பு நினைவுகளில் உழன்று, பகலில் அரை வெறியோடு நடமாடும் யதார்த்தம் இன்று ஏன் நிலையானது? நோய்கள் மனிதனின் விருப்புக் கேட்டு அவனைப் பாதிப்பதில்லை. இதுவும் அப்படியே. இதை அவன் வைத்தியம் பார்க்காத நோய் என்று நம்பினான். சிறு பிள்ளையாக இருக்கும் போது இது நோயா என்கின்ற அறிவு அவனைச் சுற்றிய பெரியவர்களுக்கு இருக்கவில்லை. அவன் பெரியவனான பின்பு ஒருவித பயம், அவமானம், வெட்கம் அவனை மருத்துவரிடம் நெருங்க விடவில்லை. அதைவிடக் கூடவாழ்பவள் பயித்தியக்காரன் என்று நினைத்துவிட்டால்?

இந்த உலகில் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இப்போது மேகலா விற்கும் அப்படி ஏதோ இருக்கிறது என்கிற ஐயம் உண்டு. அது ஒன்றும் சுகமானது இல்லை என்பது  தெரிந்திருக்கும். அதற்கு மேல் மனைவி என்றாலும் அவளால் அவனுள் புக முடியாது. அதற்காக அவள் ஒன்றும் அவனை விட்டுவிடப் போவதில்லை. இருந்தும் அவன் பயம் அவளிடம் அதைச் சொல்லாது தடுத்தது. சொல்லியும் எதுவும் ஆகப்போவதில்லை என்கின்ற சமாதானம் அவன் மனதில் தோன்றியது.

மூளை என்னும் பிரபஞ்சத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை இன்னும் பல நூற்றாண்டுகள் விஞ்ஞானம் தேடிக்கொண்டே இருக்கப் போகின்றது. அதைப் போலவே தனது மூளையும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் விளங்கும். இரவில் அது கொலைக் களங்கள் காண இழுத்துச் செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை. அப்போது அது அவன் எஜமானாக, அவன் அதன் அடிமையாக, நித்திரை அதன் போர்க்களமாக… போரில் தோற்று மரண தண்டனை பெற்று, கொலை வாள் கழுத்திற்கு வரும் இறுதிக் கணத்தில் ஐயோ… ஐயோ… என்று கத்தும் அவஸ்தை தொடர் கதையானது. யுத்தகளத்திலிருந்து, மரண தண்டனையிலிருந்து, தப்பியதாக, துடித்துப் பதைத்து எழுந்து, உண்மையை உணரும்போது உடல் நடுக்கத்தோடு வியர்த்துக் கட்டிலில் கிடந்து பரக்கப் பரக்க விழிப்பது விளங்கும்.

விசுவிற்கு குழந்தையாக இருக்கும்போது தோழிகளோடு விளையாட்டு சமையல் செய்வதாக, விளையாட்டு கலியாணம் செய்வதாக, ஓடிப் பிடித்து விளையாடுவதாக, அம்மா சாப்பாடு ஊட்டுவதாக, இன்னோர் அன்ன ஏதாவது ஒன்றாக இனிய சுகமான கனவுகள் வரும். எதுவும் அவனை அச்சுறுத்தியது இல்லை. அம்மா அடிக்க வருவது போலக் கனவு காணும்போதும் அவன் சிரித்துக்கொண்டு தப்பி ஓடுவதாகவே  கண்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவை ஒரு விளையாட்டாக, இனிமை தரும் நினைவுகளாக…

அது மாறியதாக அவன் நினைவில் ஒரு நாள் இருக்கிறது. அழியாத நினைவையும் வேதனையையும் தந்த அந்த நாள் வராமல் இருந்திருக்கலாம். வந்தாலும் அவனின் ஆழ்மனதில் நிலைக்காமலிருந்திருக்கலாம். அது நிலைத்திருந்தாலும் பருவாய் இல்லை எழுந்து ஒவ்வொரு இரவும் அவனுக்கு நரக தரிசனம் தராமலாவது இருந்திருக்கலாம். அது…?

அடுத்த நாள் பக்கத்து வீட்டில் கலியாணம். அம்மா பலகாரம் செய்யும் பெண்களின் அரட்டையில் சுகம் கண்டார். பெண்டுகளின் வாயைப் பார்த்து விசுவிற்கு அலுத்துப் போய்விட்டது. அவனோடு விளையாடிய சிறுவர்கள் அங்கங்கே தூங்கிவிட்டனர். மற்றவர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அலுத்துப்போய், ‘அம்மா வீட்ட போவமா?’ என்று கேட்டான்.

‘நீ போ ராசா, நான் இத இவையோட சேர்ந்து ஒப்பேத்தோணும். இல்லாட்டி இந்தப் பெண்டுகள் என்னைத் திண்டு கை கழுவிப் போடுவாளவை. இந்தா திறப்பு. போய் வீட்டில படு. கதவைப் பூட்டிப்போட்டுத் திறப்பை எடுத்து மேசையில வை. அப்பா தன்ர திறப்பால திறந்து கொண்டு வருவார்’ என்றார் அம்மா.

‘ம்… அவற்ற திறப்பு பெரிய திறப்பு’ என்றா பொன்னம்மா மாமி. பலகாரம் சுட்டுக்கொண்டு இருந்த பெண்டுகள் எல்லோரும் சிரித்தார்கள்.

‘நீ சும்மாய் இரண’ என்று கூறிய அம்மா, கன்னம் சிவக்க வெட்கப்பட்டார்.

பின்பு அம்மா இடுப்பில் சொருகி இருந்த திறப்பை எடுத்துக் கொடுக்க, மனம் இல்லாது அதை வாங்கியவன், கால்கள் பின்ன வீட்டிற்குச் சென்றான்.

தெருவில் இருட்டுப் பயமுறுத்தாது நிலவு காவலுக்கு நின்றது. முற்றத்தில் நின்ற வேம்பு பேய்போலத் தலை விரித்து நிழல் பரப்பியது. வீட்டிற்குப் போக மனமில்லை என்றாலும் நித்திரை நுள்ளுப் போட்டது. வழியின்றி தயக்கத்தோடு சென்று கதவின் ஓட்டையைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்துத் திறப்பைப் போட்டுத் திறந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சியில் நடுங்கியவன், ஐயோ… ஐயோ… என்று கத்தினான். முதல் இரண்டுமுறை கத்தியவன் கள்ளன் கோபமாக முகட்டிலிருந்து கீழே அவனைப் பார்த்ததில் குரலை இழந்து மயங்கி விழுந்தான்.

மயக்கம் தெளிந்தபோது அப்பா, அம்மா, அயலவர்கள் என்று பலர் கூடி இருந்தார்கள். இருந்தும் அவன் கை கால் பிணத்தின் உறுப்பு போல உறைந்து கிடந்தன. கண்கள் மிரட்சியோடு வெறித்துக் கொண்டு இருந்தன. இழந்து போன குரல் மீண்டும் வராது அவனிடம் மௌனம் குடிகொண்டு இருந்தது. அப்பா பாய்ந்து உலுக்கிய பின் கன்னத்தில் ஒன்று விட்டார். அவன் உணர்வு பெற்றான். நடந்ததை நினைத்து அழத் துவங்கினான்.

அதற்கு முன்பே ஓடு பிரித்து இருப்பதைக் கண்டுவிட்டார்கள். என்ன நடந்திருக்கும் என்பது அவர்களுக்கு விளங்கிவிட்டது. அடுத்த நாள் காலை அம்மா கைவைத்துப் பார்த்த போது விசுவைக் காய்ச்சல் தகனம் செய்தது. வழமைபோல் உள்ளூர் மந்திரவாதியைக் கூட்டிவந்து விபூதி அடித்தார்கள். காய்ச்சல் சில நாட்களில் விட்டு விட்டது. மூளையில் ஏறிய பயம் எவரும் அறியாது ஆழத்திற்குப் போய்விட்டது. அது யாரது கண்ணிலும் புலப்படாத பேயாக அவனுள் பத்திரமாக வளரத் துவங்கியது.

மகன் மிருசன் தன்னோடு வந்து படுக்குமாறு மேகலாவைக் கேட்டு அடம் பிடித்தான். வேறு வழியின்றி படுப்பதற்கு அவன் அறைக்கு மேகலா செல்ல வேண்டியதாகிற்று. போவதற்கு முதல், விசுவிற்கு மிருசன் முத்தம் கொடுத்தான். விசு அவனுக்கு முத்தம் கொடுத்து அவனைத் தன்னோடு கட்டியணைத்துக் கொண்டான். அவன் கண்கள் பனித்தன. யாருக்கும் தெரியாது அதைப் படுக்கை உறையால் துடைத்துக்கொண்டான்.

‘கதவைத் திறந்து வைக்கிறன். ஏதும் எண்டா என்னைக் கூப்பிடுங்கோ அப்பா’ என்றாள் மேகலா.

‘சரி’ என்றுவிட்டுத் திரும்பிப் படுத்தான்.

‘திடீரென்று ஓட்டைப் பிரித்து கள்ளன் வீட்டிற்குள்ளே இறங்குகிறான். அதைக் கண்ட விசு கத்த முயல்கிறான். வாய் அசைகிறது. சத்தம் வர மறுக்கிறது. ஐயோ ஐயோ என்று… இயலுமானவரைக் கத்தியும் எதுவும் வெளியே வரவில்லை. வழமையாகக் கத்தும் போது கள்ளன் முறைத்துவிட்டு ஓடுவான். இன்று அவன் ஓடவில்லை. நின்று விசுவை முறைத்துப் பார்த்தான். விசுவின் இரத்தம் உறைந்தது. அவன் கத்திய வாய் ஆ என்ற நிலையில் சிலையாகியது. முறைத்துப் பார்த்த கள்ளன் விசுவை நோக்கி வந்தான். அவன் கையில் கத்தி இருந்தது. விசுவின் இதயம் குறண்டியது. வலி… வலி… ஐயோ… ஐயோ…

அவன் இன்று கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. சத்தமற்ற அந்தக் கதறல் குரலற்ற வெறும் காற்றாக அவனுள் அடங்கிற்று. மேகலா வரவில்லை. நெஞ்சு இறுகி… மூச்சு விட முடியாமல்… சொற்கள் வெளியே வராமல்… இது வேதனையா? விடுதலையா? என்கின்ற கடைசி கேள்வி அவன் மனதில் எழுந்து மடிந்தது.

முதலில் இருட்டு மனிதர்கள் அவனை நோக்கிப் பறந்து வந்தார்கள். பின்பு வெள்ளை முகில்கள் ஊடே விண்ணில் பயணிப்பதாக அவனுக்குத் தோன்றியது. பின்னர் அதுவும் சட்டென்று இருண்டு போயிற்று.

Spotify

Spotify

கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்)

கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றபின் தமிழிற்கு மூல மொழியிலிருந்து நேரடியாக இ. தியாகலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் வீரியம் இன்றும் குன்றாது இருப்பது அதிசய மூட்டுகிறது என்பதோடு இது ஒரு துருவத்தின் பாரதம் போல அதன் சில சாயல்கள் இந்த நாடகத்தில் கொப்பளிக்கின்றன. இது நோர்வேயிலும் மற்றும் பல நாடுகளிலும் பிரபலமாக மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் ஹென்ரிக் ஜோஹன் இப்சன் (1828-1906) ஒரு நோர்வே நாடக ஆசிரியர் என்பதுடன் கவிஞரும் ஆவார். அவர் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்றவர். மேலும் வில்லியம் ஷேக்ஸ்பியருக்குப் பிறகு உலகில் அதிகம் அரங்கேறிய நாடக ஆசிரியராகக் கூறப்படுகிறது. இப்சன் நவீன நாடகத்தின் தந்தை என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.

நான்கு காட்சிகளில் இந்தநாடகம் விரிகிறது.

நபர்கள்: ஓர்நூல்வ் – பியூர்ட்டில் இருந்து ஐஸ்லாந்தின் நில ஜாமீன். பியூர்ட் (செங்குத்தான மலைகளுக்கு இடையில்இ ய-னாவின் அரைப் பகுதி போலஇ கடலில் வாயைத் திறப்பதாய்இ பனி யுகத்தில் உருவாக்கப்பட்ட, ஒரு நீண்ட கடல் பகுதி, குறிப்பாக இது நோர்வேயில் காணப்படுகிறது. இதைப் பியூர்ட் என்பார்கள்.) சிகூர்ட் கின் ஸ்தர்க்க, கடல் ராஜா. குன்னார் ஹெர்ஸெ, கெல்கலாண்டின் பணக்கார விவசாயி. ஓர்நூல்வின் இளைய மகன் தூரோல்ப்வ். ஓர்நூல்வின் மகள் டாக்னி. அவரது வளர்ப்பு மகள் யோர்டீஸ். கோர பொண்ட ஒரு கெல்கலாண்டான். குன்னாரின் நான்கு வயது மகன் ஏகில். ஓர்நூல்வின் ஆறு மூத்த மகன்கள். ஓர்நூல்வின் மற்றும் சிகூர்ட்டின் ஆட்கள். விருந்தினர்கள், பணியாட்கள், வடமுனை ஆலா, அமைதியற்ற ஆட்கள் முதலியன.

(ஏரிக் புளாட்ஒக்ஸின் காலத்தில் இந்த காட்சி வடநோர்வேயில் கெல்கலாண்டில் உள்ள குன்னாரின் பண்ணையிலும், அருகிலும் நடைபெறுகிறது.)

https://notionpress.com/read/helgalandil-yutta-virarkal-natakam

https://tamilar.wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)

தகவல் களஞ்சியம்

கவல் களஞ்சியம் துவங்கத் தேவையானவை; இணைய முகவரியும் அதற்கான இடமும். அதை யார் வேண்டும் என்றாலும் துவங்கலாம். அதை எவ்வளவு காலத்திற்கு வாழ வைக்க முடிகிறது என்பதில் அதன் அர்த்தம், இருப்பு, முக்கியத்துவம், பெறுமானம் ஆகியவை பொதிந்து இருக்கிறது. அதற்குப் பலரும் உதவினால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதை வைத்துக் கொண்டு இலக்கிய மேலாண்மை செய்ய எண்ணுவது மிகவும் சிறுமையே. தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள பல சிறுமைகளில் இதுவும் ஒன்றாகும்.

கட்டற்ற தகவல் களஞ்சியம் துவங்குவதற்கு நாடு நாடாகச் சந்திர மண்டலத்திற்கு விண்கலம் அனுப்புவதாகப் பந்தா காட்டி… ஒரு பெரும் மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்டற்ற தகவல் களஞ்சியத்தின் வளர்ச்சி இப்போது பலரது இலவச உழைப்பில் ஒரு வியாபார நிறுவனமாக மாறிக் கொண்டு வருகின்றது. அதற்கு அவர்களுக்கு உலகளாவியறீதியில் கிடைக்கும் வருமானம் சாட்சியமாகும். அதுவே இப்போது தமிழ் உலகிற்கும் பரவி உள்ளதோ என்கின்ற கேள்வி எழுகிறது.

முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும் அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தோன்றியதின் இலக்கிய நாட்டாமையும் அதனோடு சேர்ந்த அலப்பரையும் தாங்க முடியாது இருக்கிறது. இவ்விரண்டின் தகவல் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தமிழ் விக்கி என்று துவங்கப்பட்ட தகவல் களஞ்சியத்தில் ஏன் எஸ்.பொவை இருட்டடிப்புச் செய்து உள்ளார்கள்? அந்த மர்மம் விளங்கவில்லை. பிள்ளை, ஐயர் என்கின்ற வகையில் ஈழத்து இலக்கியத்தில் தேடப்போனால் அது கோணலாகப் போகும் என்பதே உண்மை. அத்தோடு ஈழத்தில் பிள்ளை என்பது அந்த சாதியினரால் மட்டும் பயன்படுத்த படுவதில்லை என்பதை அதைத் தேடுகின்றவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதை விட்டாலும் எஸ்.பொ ஈழத்து இலக்கியத்தின் மாபெரும் வைரம் என்றே சொல்ல வேண்டும். அந்த வைரத்தைப் பொத்தி வைத்தால் அது மிளிராது என்பது அல்ல.

இதன் மூலகர்த்தாவையும் அவர் வசப்பட்ட அமைப்புக்களைப் பற்றியும், அவருக்கு ஜால்ரா போடும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய வாதிகளை பற்றியும் விமர்சனங்களை வைக்கும் நிலைமை மலிந்துள்ளது. எல்லாம் இயம்பும் கலாநிதிகளும், எழுத்தின் பிரம்மாக்களும் தாங்களே என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களும் இருக்கும் அவர்கள் தகவல் களஞ்சியத்தில் ஈழத்தின் இலக்கிய மேதையைப் புறக்கணிப்பது ஏன்? இப்படி இன்று பிரம்மாக்கள் என்று தங்களை எண்ணுபவர்கள் எஸ்.பொ இருக்கும்போது அவருக்குப் புகழாரம் சூட்டினார்கள். அதற்கு எதிராக இப்போது இந்த இருட்டடிப்புக்குக் காரணம் என்ன? அதைவிட கோடம்பாக்கத்திற்கு தங்கள் இலக்கிய குப்பைகளைத் தூக்கிச் சென்று இலக்கிய வடிவம் வாங்கிய ஈழத்துப் புலம் பெயர்ந்தவர்கள் இப்போது மௌனம் காப்பதின் அர்த்தம் என்ன? இப்போதும் அவர்கள் எஸ்.பொவின் நினைவு தினம் கொண்டாடுகிறார்கள். ஆனால் எஸ்.பொவிற்கான நியாயமான கெளரவம் பாதிக்கப்படுவது பற்றிய எந்த அக்கறையையும் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன? பிரம்மா கோபித்துக் கொண்டால் அவர்கள் தகவல் களஞ்சியத்தில் தங்கள் இடம் பறிபோய்விடும் என்கின்ற சுயநலமா ? அல்லது ‘புர’ விருதுகளுக்கான அடித்தளமா? அந்த விருதுகளை பெற்றுவிட வேண்டும் என்கிற இலக்கிய நசிவு நிலையா?

பணத்திற்காக, முகமனுக்காக விலை போகும் இலக்கிய விருதுகளும் கெளரவங்களும் கேலிக்குரியவையே. எ.ஸ்.பொவிற்கு கிடைக்காத விருதுகளைக்கூடக் கடைநிலை இலக்கியவாதிகள் பெற்றுக்கொள்கிறார்களே எதனால்? யாவும் வியாபாரம், வியாபாரத்திற்கான நட்பு. அதற்காகத் தமிழகத்தை நோக்கிப் படையெடுப்பதும், அவர்களைத் தாம் இருக்கும் இடத்திற்கு அழைத்து விழுந்து விழுந்து விருந்து பகிர்வதும்… அப்படியாக தற்போதைய தமிழ் இலக்கியம் கையூட்டுப் புகழ்ச்சியில் மிதக்கிறது.

யாழ்பாணன் என்றார்கள், இலக்கிய கலகக்காரன் என்றார்கள், இன்று அவர்கள் வியாபாரத்தில் அவை தொலைந்துவிட்டது போல இருக்கிறது.

ஒரு படைப்பிற்கான பரிசு அதன் நுட்பத்திற்கான வெகுமதியாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு நான் என்கிற அகங்காரம் தேவையில்லை. அதற்கு அவர்கள் மனித மூளையையும் அதன் வேறுபடும் திறன்களை உருவாக்கிய இயற்கைக்குமே நன்றி சொல்ல வேண்டும். அதைக்கூட தமது சிறு புத்தியால் வியாபாரம் ஆக்குபவர்களை என்னவென்று சொல்வது?

எனது மொழியா வலிகள் நாவலில் இருந்து

‘உலகத்தில் படைக்கப்படும் மனிதர்களில் ஒருவன் அறிவாளி ஆவதும் இன்னொருவன் சோடை போவதும் அந்தத் தனி மனிதர்களின் குறை அல்ல. அது இயற்கையின் விசித்திரத்தில்… விருப்பில்… பல இலட்சம் வருடம் பரிசோதித்து இயற்கை கடைந்தெடுத்த நெய்யாக, தாயின் கருவறையில்… படைக்கப்படும் மூளையும், அதில் பொதிந்து கிடக்கும் நரம்புக் கலங்களும், அதனில் பாய்ச்சப்படும் மின் சமிக்கைகளும், ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமாக அமைந்து விடுகின்றது. இந்த அடிப்படை விளங்காது திறமையான மற்றைய மனிதனைப் பார்த்து மலைப்பதும், போற்றுவதும், மயங்குவதும், சங்கம் அமைப்பதும், கொடி பிடிப்பதும், கோபத்தில் தூற்றுவதும், பட்டியல் போடுவதும் பேதைமை அல்லவா? அறிவுஜீவிகள் என்பவர்கள்கூட சில விடயங்களில் அறிவீனர்களாக இருப்பதும் அந்த விசித்திர கோளத்தின் மர்மமே. இயற்கையின் சூட்சுமம் அதுவே.

ஆன்ஸ்ரயின்’ மூளையில் என்ன இருந்தது? அந்த நரம்புக் கலங்களை இயற்கை கோர்த்த விதம் யாருக்கு விளங்கும்? அணுக்களையும், அண்டத்தையும், ஆண்டவன் மனிதனுக்குக் கூறாததையும், அவரால் எப்படி மனிதருக்குக் கூற முடிந்தது? அந்த மூளைக்குள் அடங்கும்படி ஏன்? எப்படி? அது படைக்கப்பட்டது? அவர் நிரூபித்த ஞானம் ஏடுகளில் கற்றதால் வந்ததா? அல்லது அவர் மூளையில் மின் பொறிச் சுடராய் உள்ளுக்குள் இருந்து பெரும் ஊற்றாக எழுந்ததா? அல்லது பிரபஞ்சத்தில் இருந்து அவரது மூளைக்குள் மின்னலாகப் பாய்ச்சப் பட்டதா? அவர் மூளையை வெட்டி வெட்டி ஆராய்ந்து எதைக் கண்டுபிடிக்க முடிந்தது? துணைக் கலன்களுக்கும் நரம்புக் கலன்களுக்கும் என்ன தொடர்பு? துணைக் கலன்களை அதிகரித்து வருங்காலத்தில் பல ஆன்ஸ்ரெயின்களை உருவாக்க முடியுமா?

மனிதர்களுக்கு இடையேயான போட்டிகள் அறிவிலிகளுக்கான அடையாளம். அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவிலிகளின் அடையாளம். ஒவ்வொரு மூளையும் அற்புதமான தனித் தன்மையுடன் படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மூளை போல் வேறு ஒரு மூளையைத் தேடிப் பிடிக்க முடியாது’

ஆகப் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகள் தமிழைப் பற்றிக் கூவுவது உண்மை என்றால் தங்களை அற்ப ஆசைகளுக்குப் பலிகொடுக்காது பாதுகாத்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் சுய பரப்புரை பரப்புபவர்கள் ஆகவும், அதற்காகப் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு விருதுகளை விலைபேச அலைபவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப பேரங்கள் இலக்கிய தரகர்களோடு புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் நடக்கின்றன.

விருதுகள் என்பவை கேலிக்குரியவை என்பதற்கு இருக்கும் இன்னோர் காரணம் அவை உழைப்பிற்கு முதல் மரியாதை கொடுப்பவை அல்ல மாறாக இயற்கை கொடுத்த அதீத மூளைத் திறனை ஆராய்பவை அளப்பவை. அதற்கு இயற்கைக்கே இவர்கள் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும்.

இப்போது ஒருவர் இலக்கியம் படைக்கிறார் என்பது வெளியே வரவேண்டும் என்றால் பணப் பெட்டியுடன் இலக்கிய தரகர்கள் காலடியில் போய் நிற்க வேண்டும் என்பதாகிவிட்டது. அதைவிட ஈழத்தமிழர்களிடம் அவர்களது இலக்கியத்தை ஊக்குவிக்க ஒரு சுயமான எந்தக் கையூட்டுகளுக்கோ பரப்புரைகளுக்கோ வசப்படாத இலக்கிய அமைப்பு இல்லை என்பது மிகவும் மனவருத்தத்திற்கு உரியது.

எஸ்.பொவைப் பற்றி இலக்கிய உலகம் அறியும். இருந்தும் நட்சத்திரங்கள் சூரியனின் பிரகாசத்தை விழுங்க முயல்வது போன்ற சிலரின் முயற்சியே இந்த இருட்டடிப்பு.

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் திரைப்பட வசப்பட்டவர்களிடம் அகப்பட்டு இதைவிட மோசமாகச் சீரழியப் போகின்றது என்கிற கவலை ஏற்படுகின்றது.

ஏழ்மை விலங்கு

ஏழ்மை விலங்கு என்கின்ற எனது புதிய நாவல் வெளிவந்திருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

மாறாத சமுக பொருளாதார அமைப்பு பற்றி மாறிய தேசத்திலிருந்து வரும் ஒரு அபலைக் குடும்பத்தின் கதை இது. ஏழ்மை என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக அநீதி. அதை இப்போது மனிதர்களில் ஒருபகுதி நினைத்தாலும் மாற்ற முடியாது இருக்கிறது. அதற்கு மனிதர்களின் ஒரு சிறு பகுதியின் சுயநலமே முதன்மைக் காரணமாகி, மானிடத்தை வதைக்கிறது. அது பொருளாதாரத்தில் மிகவும் வளமான நாடுகளாய் இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. அதன் கொடிய பிடி இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் ஒரு முயற்சி இது.

google94a431106515e772.html

google-site-verification: google94a431106515e772.html

தத்துக்கிளி அத்தியாயம் 1 ஆன்டான் செக்கோவ்.

உலக தரத்திலான நுண்மையான இலக்கியப் படைப்புகள்.

பரதேசி நாவல் பகுதி 1

காணொளிக் கதைகள்#சிறுகதை#நாவல்#குறுநாவல்கள்#Short stories #novel#தமிழ் சிறுகதைகள் #Tamil sirukathaigal #Tamil short stories. ஆகிய பல வடிவங்களில் கதை கேட்பதற்கான தளம் இது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் புதுமையான தகமையான படைப்புகள் இதிலே இடம்பெறும்.தமிழுக்கா வாழ்தல் என்பது எங்கள் தாரகமந்திரம். செயலை செய்வதில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாத எங்கள் செயல் தொடரும். தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் ஆதரவை அதற்காக என்றும் நாடி நிற்கிறோம்.

Utforsk denne 

நாளை நாவல் பகுதி 1

நாவல் – நாளை பகுதி 1

இ.தியாகலிங்கம் நோர்வே

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை. அகிம்சையின் அனைத்து முறையீடுகளும் தீர்ந்து போனபின் ஆயுதம் தரிக்க நேர்ந்த அவலத்தை தேவகுரு உணர்ந்திருக்கிறார். எனினும், தாயகத்தில் தோற்றுவிட்ட அகிம்சை, புகலிடத்திலாவது வெல்லும் என்ற நம்பிக்கையில், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளை எல்லாம் சகித்துக் கொண்டு தமது உறுதியில் நிற்கிறார். அந்த வன்முறை நொஸ்குகள், தேவகுருவின் மனித நியாயத்தை உணர்வார்களா? லேனா என்ற பெண் மனத்தில் விழுந்த நியாயத்தின் சிறுபொறி, இனவெறியில் இருண்ட அந்த நெஞ்சுக் கூட்டுக்குள் ஒளியேற்றுமா? தெரியவில்லை. என கவிஞ்ஞர் இன்குலாப்பால் வருணிக்கப்படும் இந்த நாவல் 1999 ஆண்டு வெளிவந்தது.