இ.தியாகலிங்கம் ( Thiagalingam Ratnam)
பிறப்பு 1967,  காரைநகர், இலங்கை,
தற்போதைய தேசியம் நோர்வேஜியர்
புனை  பெயர்கள் காரைநகரான்,காரையூரான்
கல்வி கனினிப்பொறியியலாளர்
பணி கனினிப்பொறியியலாளர்
பணியகம் OUS (http://www.oslo-universitetssykehus.no)
அறியப்படுவது எழுத்தாளர்
சமயம் இந்து
பெற்றோர் இரத்தினம்,
பரமேஸ்வரி
வலைஒளி https://www.youtube.com
இணையதளம்  [1]
                    வாசிப்பதற்கு            AMZON           https://lulu.com/

இ. தியாகலிங்கம் (பிறப்பு: 1967) ஈழத்துப் புதின, சிறுகதை ,குறுநாவல் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறேன்.

பொருளடக்கம்

  • 1 வாழ்க்கைச் சுருக்கம்
  • 2 படைப்புகள்
  • 3 விருதுகள்
  • 4 இணைப்புகள்

வாழ்க்கைச் சுருக்கம்

தியாகலிங்கம் ஆகிய நான் இலங்கையின் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த நான்  ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை  யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றேன். 1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்றேன். தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்தேன். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்தேன்.

அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமானவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் எனது படைப்புகள் வெளிவந்தன.

கடைசியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றி, அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில்  அந்த இயக்கத்தைத் துறந்து, எனது வழியில் புறப்பட்டேன். அப்படியும் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால்  அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்கு வந்தேன்.

பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான  நான், இங்கிருந்து எனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம்  செய்து வருகிறேன். எனது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும் நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. எனது முக்கிய படைப்புக்களாக நாவல்களே உள்ளன.

படைப்புகள்

      1. ழிவின் அழைப்பிதழ் (1994) – நாவல் – இரண்டாம் பதிப்பு (ஆகஸ்ட் 2008) ISBN:9788189748593  
      2. நாளை (1999) – நாவல்  
      3. பரதேசி (2008) – நாவல், ISBN:81-89748-57-2 
      4. வரம் (2009) – குறுநாவல்த்தொகுதி, ISBN:978-81-89748-75-3  
      5. துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி, ISBN:978-81-89748-79-1 
      6. திரிபு (2010) – நாவல், ISBN:978-81-89748-92-0  
      7. எங்கே (2011) – நாவல், ISBN:978-81-89748-93-7 
      8. ஒரு துளி நிழல் (2014) – நாவல்,ISBN:987-93-81322-22-2  
      9. பாராரிக்கூத்துக்கள் (2014) – நாவல்,ISBN:978-93-813-22-27-7  
      10. மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – நாவல்,ISBN: 978-1-329-02347-5, 978-1-329-02337-6  
      11.  சர்வ உரூபிகரம் (2016) – புதினம் ,ISBN:978-1-326-64802-2,978-1-326-64799-5  
      12. அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம்,ISBN:978-1-326-66357-5 , 580-0-116-69913-7  
      13. வப்பு நாய்   (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி,ISBN:978-1-326-72713-0, 580-0-117-44871 0  
      14. துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம்,ISBN:978-1-326-76434-0, 580-0-118-07281-5 
      15. காமமே காதலாகி  (2016) – புதினம்,ISBN:978-1-326-80433-6, 580-0-118-75545-9 
      16. மொழியா வலிகள் பகுதி-1  (2018) – புதினம்,ISBN:978-0-244-40626-4,580-0-129-64023-2  
      17. மொழியா வலிகள் பகுதி-2  (2018) – புதினம்,ISBN:978-0-244-70629-6,580-0-129-64187-1  
      18. மொழியா வலிகள் பகுதி-3  (2018) – புதினம்,ISBN:978-0-244-10631-7,580-0-129-64170-3  
      19. மொழியா வலிகள் பகுதி-4  (2018) – புதினம்,ISBN:978-0-244-40632-5,580-0-129-64212-0  
      20. புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி,ISBN: 978-0-244-44689-5,978-0-244-74694-0  
      21. நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு,ISBN:978-0-244-48250-3,978-0-244-18248-9  
      22. இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி,ISBN:978-0-244-54705-9,  978-0-244-54706-6  
      23. மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி,ISBN:978-0-244-27386-6, 978-0-244-27386-6 
      24. கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி, ISBN:978-1105027338
      25. உறைவி (2022) – புதினம், ISBN:978-1-458-36440-1
      26. பேடும் மிதிக்கும் (2023) — புதினம், ISBN: 978-1-4477-7948-3

 

பிற மொழிகளில்

நோர்வே மொழியில் (நொஸ்க் – Norsk)

  • MENNESKEHETEN FALLER – Romanen, ISBN:979-8734658864
  • I MORGEN – Romanen, ISBN:979-8745895258
  • Allestedsnærværende – Romanen, ISBN:979-8735200659
  • Avhopper? – Romanen, ISBN:979-8734189160

ஆங்கிலத்தில்

  • Humanity is falling – Novel, ISBN:979-8733094632
  • Tomorrow – Novel, ISBN:979-8733623474
  • Omnipresent – Novel, ISBN:979-8737969943
  • Deserter? – Novel, ISBN:979-8739676320

விருதுகள்

செந்தமிழ் செல்லும் வழியெதுபார் – கவிதை – அவுஸ்ரேலியா தமிழ்ச்சங்கத்தின் பரிசு பெற்றது.

Austrelia-pr

இணைப்புகள்

இணையத்தளம் முகநூல்

*Norway wiki

Thiagalingam Ratnam

Thiagalingam (இ. தியாகலிங்கம்; f. 1967) er en norsk-tamilsk forfatter i Oslo som har skrevet ni tamilske romaner, noveller og dikt. Han har vist stort engasjement i sin rolle som forfatter og har vært med i Norsk-tamilsk litterær forening. Thiagalingam ble født i Karainagar på Sri Lanka og han har skrevet under pseudonymene «Karainagaran» og «Karaiyuran» siden 1987. Både hans romaner, noveller og dikt har vært publisert i Virakesari, som er den største riksdekkende avisen på Sri Lanka, i ukebladet RANI fra Tamil Nadu i India og i flere tamilske aviser og magasiner, som også er kommet ut i Norge. Alle bidragene hans har vært populære blant leserne. Litteratur liste

  • Azhivin Azhaippithaza 1994 Roman
  • Nalai 1999 Roman
  • Parathesee 2008 Roman
  • Varam 2009 Novell
  • Thuruva 2009 Thulikal Dikt
  • Thiribu 2010 Roman
  • Enghe? 2011 Roman
  • Oru Thuli Nizhal 2013 Roman
  • Paraari Kooththugal 2014 Roman
  • Maanidam Veeznthathammaa 2015 Roman
  • Sarva Uruupiharam 2016 Roman
  • ARANGATHIL NIRVANAM 2016 Roman
  • VAPPU NAAI 2016 Novell
  • Thuravatthin Kallaraikku 2016 Roman
  • Kamamaa Kaathalaaki 2016 Roman
  • Moliya Valikal 1,2,3,4 2018 Roman
  • BUTTHARIN KADAISI KANNEER 2019 Novell
  • NERUNCHI MULLU 2019 Novell
  • IRANDAKAN 2019 Novell
  • Maduvin Iragasiyam 2020 Novell

Litteratur og kilder